யேர்மனியின் பிராங்போட்டிலிருந்து வடக்கே 35 கிலோ மீற்றர் உள்ள பேட் நௌஹெய்ம் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.
தாக்குதலாளியான சந்தேக நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலில் குடியிருப்பாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளானர்.
குற்றத்தின் பின்னணி அல்லது சாத்தியமான நோக்கம் குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சந்தேக நபரைத் தேடுவதற்கு ஒரு உலங்குவானூர்தி பயன்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்ஒண்டு வருகின்றனர்.



















