ரஷ்ய தூதரகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினியை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பாக குருந்துவத்த பொலிஸாரால் ஜெர்மன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் வாக்குமூலம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக பதிவு செய்யப்பட்டதாகவும், ஜெர்மன் பெண் தனது மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் சீனாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றது தொடர்பான தகவல்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.




















