யூடியூப் டிரெண்டிங்கில் ஒருவாரமாக முதலிடத்தில் உள்ள சின்மயி வெர்ஷன் ‘முத்தமழை’ பாடல், பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படத்தின் பாடல்களை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். அதே பாடலை தமிழில் பாடகி தீ பாடியுள்ளார்.
இருப்பினும் Dhee பாடிய ஒரிஜினல் வெர்ஷனை விடவும் சின்மயி தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடிய முத்தமழை பாடலுக்கு ரசிர்களின் பலத்த வரவேற்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளங்களில் எந்த பக்கம் பார்த்தாலும் முத்தமழை பாடல் தான் ஒலித்து வருகின்றது. இதனை பலரும் தங்களின் குரலில் பாடியும், ரீல்ஸ் செய்தும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை பாடகி Sahithya Gajamugan தனது குரலில் பாடி தற்போது வெளியிட்டுள்ள முத்தமழை பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவரின் குரல் வளத்துக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.