குற்றப் புலனாய்வுத் துறையின் காவலிலுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், துஷார உப்புல்தெனிய, அளுத்கடை எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை புதன்கிழமை (11) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மற்ற கைதிகளை விடுவித்தது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், நேற்று (09) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.