ஈரான் இன்று மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலிற்கு இலக்கான பகுதியிலிருந்து பெரும்புகைமண்டலம் எழுந்ததை நாங்கள் பார்த்தோம் அந்த பகுதியை நெருங்கி சென்றதும் கட்டிடங்களிற்கு பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதை பார்த்தோம் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டிடமொன்றிற்கு வெளியேநபர் ஒருவர் நினைவற்ற நிலையில் விழுந்து கிடந்தார், கட்டிடத்திற்குள் சென்றவேளை ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் சுயநினைவற்ற நிலையில் கண்டோம்.
கட்டிடத்திலிருந்து வெளியே வருபவர்களை மருத்துவசோதனைகளிற்கு உட்படுத்திவருகின்றோம் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது.