இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள 10வது ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு 13வது அணியாக கனடா தெரிவாகியுள்ளது.
குறித்த உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது
இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடைபெறுகிறது.
இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் கனடா அணி, பஹாமாசை 57 ஓட்டங்களில் சுருட்டியதுடன், அந்த இலக்கை 5.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்த கனடா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ததுடன், T20 உலகக்கிண்ண தொடருக்கான 13வது அணியாக தகுதி பெற்றது.




















