ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பிரித்தானியாவிற்கு குடியேற விண்ணப்பித்த சுமார் 19,000 பேரின் தனிப்பட்ட விபரங்கள் வௌியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை 4,500 ஆப்கானியர்கள் பிரித்தானியா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அது பகிரங்கப்படுத்தப்படுவதைத் தடுக்க அரசாங்கம் ஒரு தடை உத்தரவைப் பெற்ற பிறகு, அந்த மக்கள் பற்றிய தரவு இரகசியமாக வைக்கப்பட்டது.
எனினும் தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்ததை அடுத்து, செவ்வாயன்று ஆப்கானியர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
வௌியான ஆவணத்தில் தலிபான்களிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளவர்களின் பெயர்கள், தொடர்பு விபரங்கள் மற்றும் குடும்ப விபரங்களும் உள்ளன.
மேலும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள 600 ஆப்கானிஸ்தான் சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 1,800 பேர் இன்னும் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.




















