அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசுக்கு ட்ரம்ப்பைப் பரிந்துரைக்கத் தாம் தயாராக உள்ளதாகவும் ஆனால் அவர் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளார்.
அப்படி அவர் செய்தால் தானே அவரது பெயரைப் பரிந்துரை செய்யவுள்ளதாக ஹிலாரி குறிப்பிட்டார்.
போரை அவர் முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான தருணம் என்றும் சுட்டிக்காட்டினார்.




















