எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி ஐஃபோன் 17 தொலைபேசி வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் புதிய கைக்கடிகாரங்கள் மற்றும் ஏ.ஐ சாதனங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்ச்சியையொட்டியதாகப் புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
ஐஃபோன் எனும் நாமத்திற்கு உலகளவில் பெரும் வரவேற்புள்ள நிலையில் புதிய அப்டேட்டுகளுக்காக ஐஃபோன் பிரியர்கள் காத்திருக்கின்றனர்




















