பிரபல டி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் தெருநாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடத்தப்பட்ட விவாதம் சர்ச்சைக்கு படவா கோபி மன்னிப்பு கேட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட படவா கோபி
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், தெருநாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நடிகர் படவா கோபியின் கருத்துகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.
இது தொடர்பில் அர் மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நான் பேசிய கருத்துக்கள் 3 தான்.
அதையும் நான் நியாயமாக தான் பேசினேன் நான் தவறாக பேச வில்லை.ஒன்பது மணிக்கு மேல் வெளியே சென்றால் நாய்கள் கடிக்கும் என்று சொன்னேன் ஆனால் யாரும் வெளியே போகவே கூடாது என கூறவில்லை.
சமூக வலைத்தளத்தில் தவறாக கருத்துக்களை பார்த்ததும் தான் நான் எபிசோட்டை பார்த்தேன் அதில் நான் பேசியதை தவறாக காட்டியுள்ளனர்.
விஜய் டிவி இப்படி பண்ணுவாங்கணு எதிர்பாக்கல. தயவு செய்து அவர்களை Unedited காணொளியை பதிவு செய்ய சொல்லுங்கள். என கூறியுள்ளார்.




















