நாட்டின் தேயிலை உற்பத்தி கடந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் ஒரு கிலோகிராம் தேயிலையின் தேசிய சராசரி விலை 1,182 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கிலோ தேயிலையின் விலை 1,127 ரூபாயாக பதிவாகியுள்ளது.
எனினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தில் தேயிலை உற்பத்தியானது 93.62 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
தரத்தின் அடிப்படையில் பயிரிடப்பட்ட தேயிலை, ஜூலை மாதத்தை விட 70.83 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.



















