காலி, எல்பிட்டிய இம்புலப்பிட்டிய, பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் நேற்று (8) இரவு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் இம்புலப்பிட்டியவைச் சேர்ந்த 35 வயதுடைய தோன் துமிந்த அல்விஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தகாத உறவு காரணமாக இக் கொலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



















