மட்டக்களப்பு-ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில், கைக் குண்டுகள் மீட்கப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது தொடர்பில் , பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவை பெற்று அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து, இன்று(09) காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதைக்கப்பட்டிருந்த நான்கு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



















