காவல்துறை விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கை தடுப்புப் பிரிவின் மேற்பார்வை பிரதானியாக உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தோனேசிய காவல்துறையின் உதவியுடன் ஐந்து திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களை ஜகர்த்தாவில் வைத்து கைதுசெய்யும் நடவடிக்கையில் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல முக்கிய பங்கு வகித்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராகவும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல பதவி வகித்து வந்துள்ளார்.



















