முச்சக்கரவண்டியில் சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து வந்த “கெப்பட்டிகஹலந்த ரத்து அக்கா” என் பெண் ஒருவர் வெலிபென்ன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெலிபென்ன பொலிஸாருக்க கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை – வெலிபென்ன , கெப்பட்டிகஹலந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான “கெப்பட்டிகஹலந்த ரத்து அக்கா” என்ற பெண் முச்சக்கரவண்டியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கெப்பட்டிகஹலந்த பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய பெண் ஆவார்.
இதன்போது, சந்தேக நபரான பெண்ணிடமிருந்து ஒரு இலட்சம் மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளத.
“கெப்பட்டிகஹலந்த ரத்து அக்கா” என்ற பெண் என்பவர் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் பல தடவைகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர் அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகரத்தில் இரவு வேளைகளில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிபென்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















