தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
துசித ஹல்லொலுவ மற்றும் அவரது சட்டத்தரணி சிற்றூர்தியில் பயணித்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, வாகனத்திலிருந்து ஒரு கோப்பு திருடப்பட்ட சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.



















