யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில், மருத்துவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உரும்பிராய் பகுதியில், நேற்று முன்தினம் இரவு மருத்துவர் ஒருவர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த மருத்துவர் தான் செல்வதற்கு வழி விடுமாறு கூறியவேளை, அவர் மீது அந்தக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கோப்பாய் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



















