கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து சீன நாட்டவர் ஒருவர் வீழ்ந்து இறந்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தெஹிவளை காவல் நிலையத்திற்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து, தெஹிவளை அல்விஸ் வீதியில் உள்ள வீடொன்றின் பின்னால் இருந்து இந்த உடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனியார் துறையில் பணிபுரியும் சீன நாட்டினர் குழு ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து வீழ்ந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



















