கொழும்பு புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய விலைக்கே இன்றும் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி, ஒரு கிலோ நுவரெலியா உருளை கிழங்கு 250 முதல் 280 ரூபாய் வரையிலும், வெலிமடை உருளைகிழங்கு 200 முதல் 240 ரூபாய் வரையிலும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 175 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒருகிலோ தம்புள்ள பெரிய வெங்காயம் 125 முதல் 150 ரூபாய் வரையிலும், இந்தியா பெரிய வெங்காயம் 135 முதல் 145 ரூபாய் வரையிலும், பாகிஸ்தான் பெரிய வெங்காயம் 90 முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
யாழ்ப்பாணம் சிறிய வெங்காயம் 200 முதல் 240 ரூபாய் வரையிலும், புத்தளம் சிறிய வெங்காயம் 220 முதல் 250 ரூபாய் வரையிலும், இந்திய சிறிய வெங்காயம் 220 முதல் 260 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.



















