தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த முதன்மை பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த முதன்மை பணவீக்கம் 0.7% ஆக காணப்பட்ட நிலையில், அது ஓகஸ்ட் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஜூலையில் 2.2% ஆக இருந்த நிலையில், ஓகஸ்ட்டில் 2.9% ஆக அதிகரித்துள்ளது.
உணவு அல்லாத பிரிவுகளின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் ஜூலையில் -0.6% ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 0.4% ஆக அதிகரித்துள்ளது.
முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது,



















