கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் சந்தேக நபரை செல்ல கொழும்பு தலைமை நீதவான் அனுமதித்துள்ளார்.
இதேவேளை சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மொரட்டுவ மாநகர சபையின் கீழ் வீதி அபிவிருத்தி திட்டங்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சமன்லால் பெர்னாண்டோ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















