ஹுருலு சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் மின்னேரியா தேசிய பூங்காவை பூர்வீகமாகக் கொண்ட ‘சபுமல்’ என்று அழைக்கப்படும் யானை மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
கவுடுல்ல தேசிய பூங்காவில் உள்ள சஃபாரி ஜீப் சாரதிகள் இதைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 25 வயதுடைய இந்த யானையின் தந்தங்கள் இரண்டரை அடிக்கு மேல் நீளம் கொண்டவை என்பது விசேட அம்சமாகும்.
மூன்று பூங்காக்களில் சுற்றித் திரியும் இந்த யானையின் முன் வலது காலில் இரண்டு முறை சுடப்பட்டுள்ளதுடன், யானையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள், முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களிலிருந்து சீழ் வெளியேறுவதாகக் கூறுகின்றனர்.
யானைக்கு உடனடி சிகிச்சை தேவை என்றும், யானை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (22) அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு, கவுடுல்ல குளத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நொண்டி நடக்கும் யானையை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.



















