மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது நாளைய தினம் எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில், வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனவே, வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு, வெளித் தளங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முடியுமானவரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



















