மன்னார் மடு குஞ்சிக்குளம் தொங்கு பாலம் பகுதியில் நேற்று நிர்க்கதியாகியுள்ளதாக கூறப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை இலங்கை வான்படை தேடி வருவதாக தெரிவித்துள்ளது.
அவர்களை கண்டுபிடித்தவுடன் அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்குத் தயார் நிலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த மூவரும் தமது உணவகத்தின் மேலுள்ள நீர்த் தாங்கியிலிருந்து சிவப்பு கொடியுடன் தம்மைக் காப்பாற்றுமாறு கோரியிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.



















