இந்த ஆண்டு க. பொ. த. உயர்தர பரீட்சை (GCE A/L) எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சையின் அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும்பரீட்சை நிறைவடைந்த பின்னர் அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
மீண்டும் திறக்கப்படும்
இது பல ஆண்டுகளாக சரியாக நடந்துவரும் ஒரு நடைமுறை. காலநிலை நிலைமைகள் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு வருகிறோம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ (Nalaka Kaluwewe) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், போக்குவரத்துத் தடைகள், தகவல் தொடர்பு சிக்கல்கள் மற்றும் மின் தடைகளால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என நாலக கலுவெவ குறிப்பிட்டுள்ளார்.



















