முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுமாத்தளன் பகுதியில் அவரின் உடலம் மீட்கப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேடும் பணிகள் முன்னெடுப்பு
மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காணாமல் போன ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்திக் கொண்டிருந்த போது, கடந்த 28 ஆம் திகதி இலங்கை கடற்படையைச் சேர்ந்த 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















