வடமாகாணத்தின் புதிய ஆளுநராக திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் வடக்கின் புதிய ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், சித்தார்த்தன், அவைத்தலைவர் சிவஞானம் , வைத்தியர் சிவமோகன் மற்றும் அவர்களுடன் யாழ் மாநகர மேயர் ஆர்னோல்ட்டும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் ஆளுநருக்கு வால்பிடிக்கும் நோக்கில் அங்கு சென்றுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், எந்த முகத்தினை வைத்துக்கொண்டு இவர்கள் அங்கு சென்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ள மக்கள் , சில காலம் சென்றபின்னர் இவர்களே புதிய ஆளுநருக்கு எதிராக போர்கொடிகளை தூக்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மாகாண அவைத்தலைவராக இருக்கும்போதே சி.வி.கே சிவஞானம் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் இப்போது எதற்காக அங்கு சென்று இவர்கள் எல்லோரும் ஆளுநருக்கு வால்பிடிக்க நினைக்கின்றார்கள் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.