27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவரே தனது 46வது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.
1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
27 ஆண்டுகள் சிறைத் தண்டைனைக்கு உள்ளான இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.