2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். நாயகியானஅனு இம்மானுவேல் நடித்திருந்தார். இவருக்கு துப்பறிவாளன் திரைப்படம் தான் தமிழில் முதல் திரைப்படமாகும்.
ஆனால் இதற்கு முன் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் வளர்ந்தது அமெரிக்காவில்.
அமெரிக்காவில் குடியுரிமை வைத்துள்ளார்.
மலையாளத்தின் மூலம் தான் இவர் சினிமா துறையில் முதல் முதலாக அறிமுகமானார். அதுவும் குழந்தை நட்சத்திரமாக.
தற்போது இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார்.
அண்மையில் மது அருந்துவதை போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

















