யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் முருகமூர்த்தி என்பவர் பல மில்லியன் பணம் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முருகமூத்தி என்பர் வேலை நேரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் வோட் மாஸ்டராக அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வருகிறார்.
தனக்குகிழ் கடமையாற்றும் மருத்துவ தாதிகளை கவர்ந்துகொள்ளும் முருகமூர்த்தி தனது நையாண்டிக்கு இடம் கொடுக்கும் பெண் தாதியரை வைத்து பல மில்லியன் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட பெண்தாதிகள் பல வருடமாக அவசர சிகிச்சை பிரிவில் வேலை செய்வதாகவும் மேலதிக நேர வேலை செய்வதாகவும் பதிவேட்டில் பதியபட்டு கை எழுத்தும் வைக்கபட்டிருக்கும். ஆனால் குறித்த பெண் ஊழியர் வேலை எதுவும் செய்யாமல் உடனடியாகவே தனது வீட்டிற்கு சென்றுவிடுவார்.
மாதமுடிவில் குறித்த பெண் தாதியர் பல 100 மணித்தியாலம் ஓவரைம் செய்ததாக சம்பளம் வரும்.
குறித்த பணம் பங்குபோடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அவசர சிகிச்சை பிரிவுக்குள் போதுமான தாதியர் இல்லாமையால் பல நோயாளர் பரிதாபகரமாக இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மருத்துவததாதி ஒரு நோயாளியை மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் பராமரிக்க வேண்டும் என்பது மருத்துவமனை நியதி.
ஆனால் இந்த நியமனங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த மோசடிகளை தமிழ் ஊடகத்துறையினர் கவனிப்பார் அற்று கைவிட்டிருந்த நிலையில் இந்த இரகசியம் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்துள்ளன.
யாழ்.வைத்தியசாலையில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி நடந்தவற்றை உடனடியாக கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த மோசடியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்ட்டுள்ள முருகமூர்த்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தாதிகள் தரப்பில் இருந்தும் – அரசியல்வாதிகளிடம் இருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முருகமூர்த்தியை இடமாற்ற செய்யவேண்டாம் வேண்டாம் என்று தாம் மருத்துவ மனையில் சேகரித்த கையெழுத்தை 12 பேர் ஒண்றாக சென்று வைத்தியசாலை பணிப்பாளருக்கு கொடுத்துள்ளார்கள்.
வைத்தியர்களை பொதுவாகவே கடவுளுக்கு நிகராகப் பார்க்கும் ஒரு வளக்கம் தமிழர்களுக்கு இருக்கின்றது.
வைத்தியத் துறையில் உள்ள அனைவருமே அந்த மக்களுக்கு மாத்திரமல்ல தமது நெஞ்சுக்கும் நேர்மையாக நடக்க வேண்டிய தருணம் இது.