அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார்.
ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவர் குவாசிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இது குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலகிலேயே எங்களிடம் தான் சக்தி வாய்ந்த இராணுவம் உள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் டிரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய நான்சி பெலோசி, டிரம்பின் செயல்கள் போர் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஈரானுக்கு எதிரான டிரம்பின் இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறினார்.
மேலும் உடனடியாக வன்முறையைத் தடுக்கும் விதமாக பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.