ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பிலான முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
ஈரான் படையின் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது.
இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.
இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் ‘அன் அல் ஆசாத்’ மற்றும் ‘ஹாரிர் கேம்ப்’ ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
இந்த நிலையில் இத்தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. நமது ராணுவ வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விளக்கமளித்தார்.
இந்த நிலையில் இராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது மூன்று பகுதிகளியிலிருந்து 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் எஸ்பர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ஈரான் ஏவிய 16 ஏவுகணைகளில் 11 மட்டுமே அன் அல் ஆசாத் ராணுவ தளத்தை தாக்கியது.
உயிரிழப்புகள், ஆயுதங்களை அழிப்பது மற்றும் கட்டுமானங்களில் சேதம் ஏற்படுத்துவது இதுதான் அவர்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.