மட்டக்களப்பு – ஏறாவூர் நகர மத்தி கடைத்தெருவிலுள்ள கைப்பேசிகள், தொலைத் தொடர்பு இயந்திர சாதனங்ளை விற்பனை செய்யும் கடையொன்று உடைக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு ஒன்று தமக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரையின் வழியாக உள்ளே நுழைந்து திருட்டு இடம்பெற்றுள்ளதுடன் திருடிய பின்னர் கடையின் பின்பக்க வழியால் சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நவீன, பெறுமதி மிக்க கைப்பேசிகள், திருத்தம் செய்வதற்காக கைப்பேசிப் பாவனையாளர்களால் வழங்கப்பட்ட கைப்பேசிகள் உட்பட இன்னும் பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் சீ.சீ.ரீ.வி காணொளிக் காட்சிகளின் உதவியுடன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.