பிரபல தொலைக்காட்சியின் மூலம் சினிமா பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில், 2019 ஆம் ஆண்டில் வெளியான “கோமாளி” படத்தின் மூலம் சிறந்த காமெடி நடிகர் என்ற விருதை யோகி பாபுவு பெற்று கொண்டார்.
இந்த விருதை பெற்ற யோகி பாபுவிடம் திருமணம் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேடையிலே Cuteஆக நயன்தாராவிற்கு Propose பண்ணிய யோகி பாபு!
ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020
வரும் ஜனவரி 12, ஞாயிறு இரவு 7.00 மணிக்கு#ZeeCineAwardsTamil2020 #ThiraiyinThiruvizha #ZeeTamil @iYogiBabu pic.twitter.com/rYE3C4TRmT— Zee Tamil (@ZeeTamil) January 8, 2020
அதற்கு அவர், “பொண்ணுங்களை எல்லாம் நான் பாக்குறேன். ஆனா, பொண்ணு தான் என்ன பார்க்க மாட்டேங்குது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
உடனே கோலமாவு கோகிலா படத்தில் உள்ள நகைச்சுவையான வசனத்தை பேசி காட்டும் படி நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறினார். அதுவும் நயன்தாரா கூட உங்கள் எதிரே தான் உட்கார்ந்து இருக்கிறார் என்றும் கூறினார்கள்.
அதற்கு யோகி பாபு , “கட்டுனா அந்தப் பொண்ண தான் கட்டுவேன். அந்த பொண்ணு யாரு தெரியுமா? நீங்க தான்” என்று யோகி பாபு கூறினார். இதை பார்த்து நயன்தாரா அவர்கள் வெட்கத்துடன் சிரித்து மகிழ்ந்தார்.
மேடையிலேயே க்யூட்டாக நயன்தாராவிற்கு யோகி பாபு அவர்கள் ப்ரொபோஸ் பண்ணி உள்ளார். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.