நடிகர் சிம்பு எப்போதும் அவரது கருத்துக்களை தைரியமாக, வெளிப்படையாக தெரிவிக்க கூடியவர். அவர் தொடர்ந்து தமிழ் பிக்பாஸ் சீசன் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து கொண்டு வருபவர்.
அந்த வகையில், சில மாதங்கள் முன்பு முடிந்த மூன்றாவது சீசனில் பங்கேற்ற நடிகை மீரா மிதுனை அழைத்து பேசிய நடிகர் சிம்பு, ‘நீங்க தைரியமா பல விஷயங்கள் செய்ரீங்க’ என பாராட்டினாராம். அதன் பிறகு ‘இருந்தாலும் நீங்க சேரன் சார் கிட்ட அப்படி செஞ்சிருக்க கூடாது’ என்று வெளிப்படையாகவே திட்டினாராம்.
சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் அவர் இது குறித்து, மீரா மிதுன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் சிம்பு ரசிகர்களோ, உங்களுக்கு என் இந்த வேலை மீரா மிதுனை எல்லாம் அழைத்து பேச வேண்டுமா.? உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம் என்று சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.