பிரித்தானிய இளவரசர் ஹரியும், மேகனும் அமெரிக்காவுக்கு குடிபெயர விரும்புவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அரச பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி மற்றும் மேகன் வட அமெரிக்காவில் குடிபெயர விரும்புவதாக அறிக்கையில் தெரிவித்தனர்.
இதையடுத்து வட அமெரிக்காவில் உள்ள கனடாவுக்கு தான் அவர்கள் குடிபெயரவுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
ஆனால் இதில் புதிய திருப்பமாக மேகனுக்கு வெகுகாலமாகவே அமெரிக்காவில் கணவருடன் குடியேறவேண்டும் என திட்டமிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மேகன் தாயார் வசிக்கும் நிலையில் அங்கேயே குடியேற இருவரும் விரும்புவதாக கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறிய பின்னரே இருவரும் அங்கு குடிபெயர விரும்புகிறார்கள்.
அதே சமயம் கனடாவை தங்கள் இரண்டாவது வீடாக இருவரும் கருகிறார்கள்.
ஹரி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகாராணியாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மகாராணியின் நிலையை நினைத்தால் வருத்தமாக உள்ளது எனவும் அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் டிரம்ப் கூறியதாக தெரியவந்துள்ளது.