இலங்கையில் புத்த மத கோவிலில், யானை ஒன்று கட்டிவைக்கப்பட்டு அடிக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Bellanwila கோவில் என்னும் அந்த கோவிலில் உள்ள சிறு குளம் ஒன்றில் படுக்கும் நிலையில் கட்டி வைக்கப்பட்டுள்ள யானை ஒன்றை, பாகன் ஒருவர் குச்சியால் அடிப்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.
எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருக்கும் அந்த யானை சங்கிலியை தனது தும்பிக்கையால் பிடித்து எழும்ப முயன்றும் முடியாததால் வேதனையில் சத்தமிடுகிறது.
அவர் அந்த யானையை அடித்தபின் ஒருவர் அதன் காலை சுத்தம் செய்வதால், அந்த பாகன் எதற்காக அந்த யானையை அடிக்கிறார் என்பது தெரியவில்லை. வீடியோ வெளியானதையடுத்து விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இதற்கிடையில், Myan Prince என்று அழைக்கப்படும் அந்த யானை, Wimalarathana Thero (77) என்னும் மூத்த புத்த பிக்கு அதற்கு உணவளிக்கும்போது அவரைக் கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, மொத்தம் 361 யானைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த யானையை காட்டுக்குள் விடுவிக்கக்கோரும் மனு ஒன்றில் 125,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.