அமெரிக்கா-ஈரான் பிரசினையால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் இராணுவ வீரர்கள் மத்தியில் புத்தாண்டு உரையாற்றிய போது, மத்திய கிழக்கில் கூடுதலாக இராணுவப்படை அனுப்பப்படும் என்ற முக்கிய அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்டார்.
அவர் கூறியதாவது, மத்திய கிழக்கில் பிரான்ஸ் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை பிரான்ஸின் சார்லஸ் டி கோலே விமானம் தாங்கி கப்பலையும் அதன் போர்க் குழுவையும் நிறுத்துப்படும் என்று இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.
அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட கடல் பகுதிக்கு பயணிப்பதற்கு முன்னர் 2020 ஜனவரி முதல் ஏப்ரல் வரை மத்திய கிழக்கின் ‘சம்மல் நடவடிக்கைக்கு’ விமானம் தாங்கி ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதட்டங்கள் வளர்ந்து வரும் சூழலில் ஐ.எஸ் போராளிகளுக்கு எதிரான போராட்டம் பலவீனமடையக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பிரான்ஸ் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.