சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் தர்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
இந்நிலையில் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு இல்லை என்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை செய்து வருகின்றது.
இந்நிலையில் தர்பார் படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 200 கோடி வசூல் செய்துள்ளதாம், முதல் 4 நாட்களிலேயே ரூ 150 கோடி வசூலை கடந்த தர்பார் தற்போது ரூ 200 கோடியை கடந்துள்ளது.
மேலும், எந்திரன், கபாலி, 2.0, பேட்டயை தொடர்ந்து 5வது முறையாக ரூ 200 கோடி வசூல் கொடுத்த ஒரே நடிகராக ரஜினி மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.