கடந்த ஜனவரி 8ம் திகதி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்கள் குறித்து அந்நாட்டு இராணுவம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்க நடத்திய தாக்குதல் தளபதி சுலைமானி கொல்லப்பட்டத்திற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்தது.
அதன் படி ஈராக்கில் உள்ள ஜனவரி 8ம் திகதி அல் ஆசாத் விமானத் தளம் உட்பட இரண்டு இராணுவ தளங்கள் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியது.
இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. ஆனால், ஒருவர் கூட கொல்லப்படவில்லை மற்றும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறிய அமெரிக்க இராணுவம், தற்போது ஜனவரி 8 அன்று ஈரானிய ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக பல அமெரிக்க இராணுவ வீரர்கள் மூளையதிர்ச்சி பாதிப்புகளுக்காக சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு அடுத்த நாட்களில், பாதிக்கப்பட்ட 11 வீரர்கள் மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், வீரர்கள் எவரும் கொல்லப்படவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது.