அர்ஜென்டினாவில் புகைப்படம் எடுக்க முயன்ற இளம் பெண்ணை, நாய் கடித்து குதறிய சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுகுமனைச் சேர்ந்த 17 வயதான லாரா சான்சன் என்ற பெண்ணே, நாயுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு எதர்பாராத பின்விளைவை சந்தித்துள்ளார்.
லாரா சான்சன், தனது நண்பரின் செல்லப்பிராணியான கென்னை என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் , கட்டியணைத்த படி புகைப்படம் எடுத்துள்ளார்.
இதன் போது கடுப்பான கென்னை, லாராவின் முகத்தை கடித்து குதறியுள்ளது. முகத்தின் இருபக்கத்திலும் படுகாயமடைந்த லாரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சுமார் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளது.
Sesión de fotos con Kenai sale mal pic.twitter.com/gYU76iGGFC
— •Lara• (@LaruSanson) January 14, 2020
படுகாயமடைந்த லாரா, கென்னை ஏதுவும் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். நாய் வலியால் பாதிக்கப்பட்டிருந்திருக்கும், அதனால் தான் ஆக்ரோஷமாக கடித்தது என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.