பிரித்தானியாவில் அறுவை சிகிச்சைக்குப்பின் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில், அவரது சிகிச்சையின்போது தவறுகள் நிகழ்ந்ததாக அவரது கணவருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.
Susan Warby என்ற பெண்மணி குடல் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக West Suffolk Hospital என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், அறுவை சிகிச்சைக்குப்பின் ஐந்து வாரங்களில் அவர் உயிரிழந்தார்.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த Jon Warbyக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் Susanஇன் சிகிச்சையில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதாக அந்த கடிதம் கூறியது. உடனடியாக coroner என்னும் அதிகாரியை தொடர்புகொண்டார் Jon.
கடிதத்தை வாசித்த coroner, உடனடியாக நடவடிக்கையில் இறங்குமாறு பொலிசாரை கேட்டுக்கொண்டதோடு, மருத்துவமனையையும் விசாரணையைத் துவக்குமாறும் உத்தரவிட்டார். விசாரணையில், பல விடயங்கள் தெரியவந்துள்ளன.
அறுவை சிகிச்சையின்போது Susanக்கு தவறுதலான திரவம் குழாய் வழியாக கொடுக்கப்பட்டது, குழாய் ஒன்றை மாற்றும்போது அவரது நுரையீரலை சேதப்படுத்தியது, மூத்த நிபுணர் செய்யவேண்டிய அந்த சிகிச்சையை உதவியாளர் ஒருவர் செய்தது, பூஞ்சைத்தொற்று, இரத்தத்தில் தொற்று மற்றும் நிமோனியா ஆகிய காரணங்களால் உள்ளுறுப்புகள் செயலிழந்தது என ஏராள விடயங்கள் தெரியவந்துள்ளன. பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், யார் துப்புக்கொடுத்தது என்பதை அறிவதற்காக மருத்துவமனை நிர்வாகம் ஊழியர்களை மிக மோசமான வகையில் அவமதித்து மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.