வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் சகல பட்டதாரிகளும் தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை செய்யும் வகையில் துரிதமாக அரச பணிகளில் நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் பட்டாதாரிகளின் பிரதிநிதிகள் மத்தியில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அரச, அறைகுறை அரச மற்றும் திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பான தகவல்கள் சேரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் துரிதமாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். தொழில் வாய்ப்புகளை பெறுவோருக்கு தலைமைத்துவம் மற்றும் அரச சேவை தொடர்பாக உரிய பயிற்சிகளும், புரிதலும் பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரச சேவை மற்றும் அரச ஊழியர்களை உருவாக்குவதே எனது நோக்கம். பயிற்சி பெறாதா தொழிலாளர்கள் நாட்டுக்கு வெளிநாட்டு அந்நிய செலாவணியை பெற்று தருகின்றனர்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வலுவான அடிப்படையுடன் கூடிய கைத்தொழில் நாட்டில் உருவாகவில்லை.
நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இருக்கும் பெரிய பலம் மனித வளம். இதனால், நாட்டில் உள்ள புத்திசாலிகள, இளைஞர்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் தேவை உள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.