உக்ரேனிய விமானத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கறு ப்பு பெட்டிகளை விரைவில் பிரான்ஸ் அல்லது உக்ரைனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானுக்கு கனடா மீண்டும் கோரிக்கையை விடுத்துள்ளது.
கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் உடன் இந்த விஷயம் தொடர்பாக பேசியதாக கூறினார்.
கருப்புப் பெட்டிகளை உக்ரைன் அல்லது பிரான்சுக்கு விரைவாக அனுப்ப வேண்டும் என்ற கனடாவின் நிலைப்பாட்டை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
எனவே நிபுணத்துவம் இருக்கும் இடத்தில் இதைச் ஆய்வு செய்ய முடியும், அது வெளிப்படையான முறையில் செய்யப்படலாம் என்று ஷாம்பெயின் கூறினார்.
ஈரானை அவர்களின் வார்த்தைகளால் அல்ல, ஆனால் அவர்களின் செயல்களால் தீர்மானிப்பதாக ஷாம்பெயின் கூறினார்.
ஜனவரி 8ம் திகதி தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உக்ரைன் விமானம் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது, 57 கனேடியர்கள் உட்பட விமானத்தில் இருந்த 176 பேரும் கொல்லப்பட்டனர்.
ஈரான் தற்போதைக்கு கருப்பு பெட்டிகளை தாங்களே வைத்திருக்க விரும்புகிறது என்று ஈரானின் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விசாரணைத் தலைவரான ஹசன் ரெசாய்பாரின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய விமானத்தின் கறப்பு பெட்டி ஈரானில் உள்ளது, தற்போது அதை அனுப்ப எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்று ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.