அமெரிக்காவில் வேர்ஜினியா மாநிலத்தின் ரிச்மன்ட் நகரில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கி பேரணியில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி பேரணியானது அங்கு வருடாந்தம் நடைபெறும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு என்ற போதிலும், அந்த நாட்டு ஜனநாயக கட்சி கடந்த ஜனவரி மாதம் கடும் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்களை நாடாளுமன்றில் நிறைவேற்றியிருந்தது.
இது துப்பாக்கி பாவனையாளர்கள் இடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இடம்பெறவுள்ள குறித்த துப்பாக்கி பேரணியில் பெரும்பாலனவர்கள் இணைந்துக்கொள்வதற்கும் வழிவகுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் அங்கு, மாநில ஆளுநர் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன், ரிச்மன்ட நகர மண்டப பகுதியில் துப்பாக்கிகளுடன் உள்நுழைவதற்கும் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.