நாட்டின் தென்மேற்கு பகுதியிலும், கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவிலான கடும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்த பகுதிகளில்; தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான வேளையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டவலியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.