தென்மராட்சி மட்டுவில், சந்திரபுரம் வடக்கில் இன்று ஒரு குடும்பமே நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதில் மாமியார் உயிரிழந்த நிலையில், இளம் தம்பதியான கணவன், மனைவி இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடன் பிரச்சனை காரணமாக இவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் நவரத்தினம் விமலேஸ்வரி (64) என்பவர் உயிரிழந்துள்ள நிலையில், சிவபாலன் சிவலக்சன் (35), சிவலக்சன் கீர்த்திகா (35) ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.