ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே பல ராக்கெட்டுகள் தாக்கியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 3 ம் திகதி பாக்தாதி சர்வதேச விமான நிலையத்தின் மீது அமெரிக்க இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள பசுமை மண்டலத்தில் மூன்று ராக்கெட்டுகள் விழுந்ததாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
“Rocket attack alarms sounding off multiple times on the #US #Baghdad Embassy Complex and Union III. Heard the booms myself on Union III. Speakers telling all to take shelter immediately.” pic.twitter.com/F1lpbWm9RE
— Nafiseh Kohnavard (@nafisehkBBC) January 20, 2020