வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் முச்சக்கர வண்டியொன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
வவுனியா, முதலாம் குறுக்கு தெரிவில் இருந்து இறப்மைக்குளம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், ஹொரவப்பொத்தானை வீதியில் இருந்து சூசைப்பிள்ளையார் குளம் நோக்கி வந்த பட்டா ரக வாகனமும் முதலாம் குறுக்குதெரு சந்தியில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த குடும்ப பெண் ஆகியோர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்ப பெண்ணுடன் இருந்த குழந்தைக்கு தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.