பாகிஸ்தான் ரசிகர்களை விலங்குகள் என திட்டியதால் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் அது குறித்து மனம் திறந்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர்களை கிப்ஸ் குரூரமான விலங்குகள் என்று தரக்குறைவாக பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் தற்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹெர்ஷல் கிப்ஸ், தன்னுடைய மனைவி மற்றும் மகனை இருக்கையில் இருந்து ரவுடித்தனமாக பாகிஸ்தான் ரசிகர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் தான் கோபமடைந்து அந்த வார்த்தைகளை பிரயோகித்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கிப்சின் இந்த பதிவிற்கு அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆதரவு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.